Mukesh Kumar: ஷர்துல் தாக்குருக்கு காயம்-இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mukesh Kumar: ஷர்துல் தாக்குருக்கு காயம்-இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு

Mukesh Kumar: ஷர்துல் தாக்குருக்கு காயம்-இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு

Manigandan K T HT Tamil
Jul 20, 2023 08:16 PM IST

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியில் 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இவர் பிறந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித், முகேஷ் குமார்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித், முகேஷ் குமார்

பெங்கால் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த முகேஷ் குமாருக்கு 29 வயது ஆகிறது.

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியில் 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இவர் பிறந்தார்.

இவரது குடும்பம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்தது. இவரது தந்தை கொல்கத்தாவில் டாக்ஸி பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார்.

அக்டோபர் 30, 2015-16 ரஞ்சிக் கோப்பையில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். 2015-16 விஜய் ஹசாரே டிராபியில் 13 டிசம்பர் 2015 அன்று லிஸ்ட் ஏ அணியில் அறிமுகமானார். ஜனவரி 6, 2016 அன்று 2015-16 சையது முஷ்டாக் அலி கோப்பையில் போட்டியில் அறிமுகமானார்.

ஐபிஎல்-இல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.

செப்டம்பர் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்தியத் அணிக்கு அழைக்கப்பெற்றார். டிசம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஜூன் 2023 இல், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான மூன்று வடிவங்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

இன்று டெஸ்டில் அறிமுகமாகியிருக்கிறார்.

2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் ஜெயித்து, பவுலிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

முதல் தர கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் முகேஷ் குமார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டிலும் அசத்துவார் என நம்பலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.