India vs Sri Lanka: சுட சுட வந்த சூப்பர் ஓவர்.. தட்டுத்தடுமாறிய இலங்கை! - த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
India vs Sri Lanka: ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். 10 ரன்னில் ஜெய்ஸ்வால் பெவிலியனுக்கு நடையைக்கட்ட, சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். -த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்திய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து, தொடரை கைப்பற்றி இருந்தது.
3-வது டி20 கிரிக்கெட் போட்டி
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். 10 ரன்னில் ஜெய்ஸ்வால் பெவிலியனுக்கு நடையைக்கட்ட, சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிபம் துபே 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, வெறும் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. சுப்மல் கில் -ரியான் பராக் ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, பராக் 26 ரன்னில் நடையை கட்ட, சுந்தரோ 25 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.
சூப்பர் ஓவர்
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்து, இந்தியா எடுத்த ரன்னுடன் சமன் செய்தது. இதனையடுத்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அதில் இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, இந்தியா வெற்றியடைய வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் மகேஷ் தீக்ஷனா வீசிய பந்தில், பேட்டிங் செய்த சூர்ய குமார் யாதவ் 4 ரன்கள் அடித்து, இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இலங்கையை தோற்கடித்து, இந்திய அணி தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்