CWC 2023: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அட்டவணை மாற்றம்! காரணம் என்ன?
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், கடந்த 2019 உலகக் கோப்பை தொடர் போல் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளுடன் மோதும் விதமாக ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளன.
இதையடுத்து உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய நாளில் நவராத்திரி விழா தொடங்கவுள்ளதால், போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத காரணத்தால் இந்த போட்டியின் தேதியில் மாற்றம் செய்யப்படும் என கடந்த சில நாள்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. போட்டிக்கான தேதி மாற்றம் குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்த நிலை, இரு அணிகள் மோதும் போட்டி ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் போட்டி நடைபெறும் இடத்தில் எவ்வித மாற்றும் இல்லை எனவும் தெரிகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்