India vs England World Cup 2023: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India Vs England World Cup 2023: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

India vs England World Cup 2023: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Marimuthu M HT Tamil
Oct 30, 2023 10:01 AM IST

இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

லக்னோ: அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச (ODI) போட்டியின் போது, இங்கிலாந்தின் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சக வீரர்களுடன் கொண்டாடினார். (புகைப்படம் தீபக் குப்தா/ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
லக்னோ: அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச (ODI) போட்டியின் போது, இங்கிலாந்தின் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சக வீரர்களுடன் கொண்டாடினார். (புகைப்படம் தீபக் குப்தா/ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

முன்னதாக, தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறியது. எப்போதும் அதிரடி காட்டும் கில், இன்று 9 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார். நம்பிக்கையுடன் ரோகித் சர்மா நின்று கொண்டிருந்த நிலையில், விராட் கோலி, டக் அவுட்டாகி சென்றார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழக்க அணி தள்ளாடியது.

இதையடுத்து, வந்த கே.எல். ராகுல் பொறுப்புடன் விளையாடினார். மறுபக்கம் ரோகித் சர்மா அரை சதத்தைப் பதிவு செய்தார். கே.எல்.ராகுலும் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லி பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

கேப்டனாக 100ஆவது ஆட்டத்தில் விளையாடிய ரோகித் சர்மா, சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவர் அடில் ரஷித் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 8 ரன்களிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய 3 பவர்ஃபுல் பேட்ஸ்மேன்கள் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 229 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் இங்கிலாந்து அணி, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் 230 ரன்கள் இலக்கு என்ற சேஸிங்கில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி, 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, வெறும் 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.

முன்னதாக, இந்திய வீரர் முகமது ஷமி, இங்கிலாந்தின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரரான ஜானி பெர்ஸ்டவ் 14 ரன்கள் எடுத்தும், டாவிட் மலன் 16 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின், களமிளறங்கிய ஜோ ரூட், ரன் எதுவும் எடுக்காமல் பும்ராவின் பாலில் எல்பிடபிள்யூ ஆனார். பின், களம் இறங்கிய பென்ஸ்டோக்ஸ், முகமது ஷமியின் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், குல்தீப் யாதவின் பந்தில் வெறும் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மேலும், லைம் லிவிங்ஸ்டன் குல்தீப் யாதவின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதேபோல், முகமது ஷமி வீசிய பந்தில் மொயின் அலி, ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பின், இங்கிலாந்து வீரர்களான கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. குறிப்பாக, இந்திய அணியின் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய அணியின் 229 ரன்களை சேஸிங் செய்யமுடியாமல், இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கேப்டனாக 100ஆவது போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் பொறுப்புடன் ஆடி 87 ரன்களை எடுத்து அணியினை இக்கட்டான சூழலில் இருந்து மேடு ஏற்றினார். அதனால் அவருக்கு இன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.