India Women Won: முதல் டி20-இல் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி! பந்துவீச்சில் அபாரம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Women Won: முதல் டி20-இல் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி! பந்துவீச்சில் அபாரம்

India Women Won: முதல் டி20-இல் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி! பந்துவீச்சில் அபாரம்

Manigandan K T HT Tamil
Jul 09, 2023 09:48 PM IST

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கேப்டன ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணி
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணி (@BCCIWomen)

3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது.

முதல் டி20 ஆட்டம் இன்று டாக்காவில் நடந்தது. அந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய வங்கதேசம் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷோர்னா அக்தர் மட்டும் 28 ரன்கள் எடுத்தார்.

ஷஃபாலி வர்மா, மின்னு மனி, பூஜா வஸ்தரகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கேப்டன ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

ஸ்மிருதி மந்தனா 38 ரன்களும், ஜெமிமா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களம் புகுந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். விக்கெட் கீப்பர் யஸ்திகா அவருடன் தோள் கொடுத்தார்.

சுல்தானா கதுன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவ்வாறாக இந்திய அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் அடித்து வெற்றி கண்டது.

ஹர்மன்ப்ரீத் கவுர் பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாக தேர்வு செய்யப்பட்டார்.

பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியினர் அதிக ஸ்கோரை எட்டவிடாமல் கட்டுப்படுத்தினர் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

"இது ஒரு சிறந்த குழு முயற்சி. பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இளம் பெண்கள் சிறப்பாக பந்துவீசினர். முதல் ஆறு ஓவர்களில் அவர்கள் எவ்வாறு பந்துவீசப் போகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினேன், அவர்கள் இருவரும் நிலைமைகளை மிகவும் முன்கூட்டியே புரிந்து கொண்டனர் என்று நினைக்கிறேன். இவர்களைத் தவிர தீப்தியும் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரைக் கொண்டுள்ளார், அதை அவர் இன்று நிரூபித்துள்ளார்'' என்றார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

2வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.