IND vs WI: விடாது பெய்த மழையால் இரண்டாவது போட்டி டிரா! தொடரை வென்ற இந்தியா - தொடர் நாயகன் விருதில் நிகழ்ந்த டுவிஸ்ட்
ஐந்தாவது நாள் முழுவதும் மழை காரணமாக போட்டி நடைபெறாத நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது போட்டி டிரா ஆனது. இந்தியா இந்த தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. டோமினாகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நாளில் 289 ரன்கள் தேவை என்ற நிலை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
இதனால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்து முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் தொடர் நாயகன் விருது சர்ப்ரைசாக யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த லிஸ்டில் 15 விக்கெட்டுகள் மற்றும் 56 ரன்கள் எடுத்து அஸ்வின், 266 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வில் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருந்தனர். இருந்தபோதிலும் கடைசி நாள் ஆட்டம் முழுமையாக நடைபெறாத நிலையில் தொடர் நாயகன் விருது யாருக்கும் அளிக்கப்படவில்லை.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்