India vs sri lanka: பேட்ஸ்மேன்களை பஞ்சராக்கிய பவுலர்கள்.. ரோஹித் நிகழ்த்திய மாயம்! - இந்தியாவுக்கு டார்க்கெட் எவ்வளவு?
இந்தியா இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிற்கு எவ்வளவு ரன்கள் இலக்காக வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. விராட் கோலி, கே.எல். ராகுல், மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளனர்.
டாஸ் வென்ற இலங்கை அணி
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது. பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியில் இருந்து, ஓப்பனர்களாக அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் களமிறங்கினர். அவிஷ்கா 1 ரன் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து, பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
இதற்கடுத்தபடியாக வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறி இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் மறுமுனையில் நிசாங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து அசத்தினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி நம்பிக்கை சேர்த்துக்கொண்டிருந்தார்.