West Indies 1st Innings: சிராஜ் வேகத்திற்கு அடிபணிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி! 255 ரன்களுக்கு ஆல்-அவுட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  West Indies 1st Innings: சிராஜ் வேகத்திற்கு அடிபணிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி! 255 ரன்களுக்கு ஆல்-அவுட்

West Indies 1st Innings: சிராஜ் வேகத்திற்கு அடிபணிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி! 255 ரன்களுக்கு ஆல்-அவுட்

Manigandan K T HT Tamil
Jul 23, 2023 08:28 PM IST

Ind vs WI: முகேஷ் குமார், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சிராஜ்
5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சிராஜ் (AFP)

அற்புதமாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை கேப்டன் பிராத்வைட் மட்டுமே 75 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

முகேஷ் குமார், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடட்டில் நடந்து வருகிறது.

கடந்த 20ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் எடுத்து இரண்டாவது நாளில் ஆல் அவுட் ஆனது.

500 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 121 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் அடித்திருந்தனர்.

இரு அணிகளுக்கு இடையே இந்த டெஸ்ட் 100வது போட்டியாகும்.

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கேமார் ரோஜ், ஜோமேல் வாரிகன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள், ஜாசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்திருந்தது.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் தொடக்க வீரரான தேஜ் நரின் சந்தர்பால் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மூன்றாவது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல்ல தொடக்கத்தோடு சிறப்பாக விளையாடினர்.

மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 37 ரன்களுடன் அலிக் அதானேஷ், 11 ரன்களுடன் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன.

23.4 ஓவர்களில் 6 மெய்டன் ஓவர்களை வீசினார் முகமது சிராஜ். 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இந்தியா விளையாடி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.