Asia Championship Hockey 2023: இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா பலப்பரிட்சை! பாகிஸ்தான் அணிக்கு பெற்ற இடம் தெரியுமா?
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் அரையிறுதியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியாவும், தென் கொரியா அணியை வீழ்த்தி மலேசியாவும் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் தென்கொரியா - மலேசியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6-2 என்ற கோலி கணக்கில் மலேசியா அணி வெற்றி பெற்றது. தனது பரிவில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மலேசியா, அந்த பார்மை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - ஜப்பான அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி விளையாடினார்கள்.
இந்திய வீரர்களில் ஆகாஷ்தீப் சிங் (19வது நிமிடம்),ஹர்மன்ப்ரீத் சிங் (23வது நிமிடம்), மந்தீப் சிங் (30வது நிமிடம்), சுமித் (39வது நிமிடம்), தமிழ்நாடு வீரர் கார்த்திக் செல்வம் (51வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணிக்காக 300வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த தொடரில் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகள் என அனைத்திலும் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இறுதிப்போட்டியில் மலேசியா அணியுடன் பலப்பரிட்சை செய்யவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்த தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்