Asia Championships Archery: மூன்று தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்ற இந்தியா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Championships Archery: மூன்று தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்ற இந்தியா

Asia Championships Archery: மூன்று தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்ற இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 10, 2023 03:23 PM IST

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்தியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ர இந்திய வீராங்கனைகள்
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ர இந்திய வீராங்கனைகள்

பர்னீத் கெளர், ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி என மூவர் கூட்டு இணைந்த இந்திய அணி, சென் யி ஹ்சுவான், ஹுவாங் ஐ-ஜோ மற்றும் வாங் லு-யுன் ஆகியோர் இடம்பிடித்த சீன தைபே அணியை இறுதி போட்டியில் 234-233 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.

யு21 உலக சாம்பியன் பிரயான்ஷுடன் இணைந்து, 17 வயது அதிதி சுவாமி கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் தாய்லாந்தின் கனோக்னபஸ் கவ்சோம்புவை 156-151 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

ஆசிய விளையாட்டு 2018இல் சாம்பியன் பட்டம் வென்ற அபிஷேக் வர்மா, கொரிய குடியரசின் ஜூ ஜேஹூனை 147-146 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஒரே நாளில் 5 பதக்கத்தை வென்ற இந்தியா அணி, மொத்தம் 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கம்.

இந்தியா வென்றிருக்கும் ஏழு பதக்கங்களில், ஒரேயொரு வெண்கலம் அணி போட்டியில் கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.