HT Sports Special: இந்திய அணியின் உயரமான விக்கெட் கீப்பர்! ஸ்டம்பிங்கில் கலக்கிய 70s தோனி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: இந்திய அணியின் உயரமான விக்கெட் கீப்பர்! ஸ்டம்பிங்கில் கலக்கிய 70s தோனி

HT Sports Special: இந்திய அணியின் உயரமான விக்கெட் கீப்பர்! ஸ்டம்பிங்கில் கலக்கிய 70s தோனி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 12, 2023 06:40 AM IST

இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கி விக்கெட் கீப்பிங்கில் தனியொரு தாக்கத்தை ஏற்படுத்திய வீரராக மறைந்த போச்சைய்யா கிருஷ்ணமூர்த்தி உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அந்த தோனி என்று அழைக்கும் விதமாக ஸ்டம்பிங் செய்வதில் கில்லியாக இருந்துள்ளார்.

இந்திய அணிக்காக 1970களில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போச்சையா கிருஷ்ணமூர்த்தி
இந்திய அணிக்காக 1970களில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போச்சையா கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவுக்காக 1971 சீசனில் 5 டெஸ்ட் போட்டிகளிலும், 1976இல் ஒரேயொரு ஒரு நாள் போட்டியிலும் இவர் பங்கேற்றுள்ளார். இவர் விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்நிய நாட்டு தொடராகவே அமைந்தது. அத்துடன் இவரது ஒரேயொரு ஒரு நாள் போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிராக அமைந்தது.

அதே போல் 1966 முதல் 1979 வரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர் பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிங் அவுட் செய்வதில் கில்லியாக இருந்துள்ளார். சர்வதேசம், உள்ளூர் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடி அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக ஒரே விக்கெட் கீப்பராக இருந்துள்ளார்.

1970 கால கடத்தில் இந்தியாவின் பிரதான விக்கெட் கீப்பராக இருந்தவர் ஃபரூக் எஞ்சினியர். இவர் அ்ணியில் இடம்பெறாமல் போன நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்த போச்சைய்யா கிருஷ்ணமூர்த்தி பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்காதபோதிலும், சிறந்த விக்கெட் கீப்பராக கலக்கியுள்ளார்.

மொத்தம் 6 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள போச்சைய்யா கிருஷ்ணமூர்த்தி 8 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங் என 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு காரணமாக இருந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக 108 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இவர் 150 கேட்ச்கள், 68 ஸ்டம்பிங் என 218 விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இது அந்த காலகட்டத்தில் இந்தியர் ஒருவர் நிகழ்த்திய சாதனையாகவே அமைந்தது. 4 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் பங்கேற்று 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் என 4 விக்கெட்டுகளை வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார்.

அணியில் உள்ள அனைத்து பொஷிசன்களிலும் பேட்டிங் செய்துள்ள போச்சைய்யா அத்தனை இடங்களிலும் 100+ பார்ட்னர்ஷிப்பை அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையும் புரிந்துள்ளார். ஆனால் இவர் ஒரு சதம் கூட அடித்தில்லை என்பது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம். விஸ்டன் கிரிக்கெட் ஆல்மனாக்கில் இடம்பிடித்திருக்கும் போச்சய்யா கிருஷ்ணமூர்த்திக்கு இன்று 76வது பிறந்தநாள்.

1947வது வருடம் இதே நாளில் பிறந்த போச்சைய்யா கிருஷ்ண மூர்த்தி, உடல் நல குறைவால் 1999 ஜனவரி மாதத்தில் உயிரிழந்தார். இந்திய அணியின் கிளாசிக் வீரர்களில் விக்கெட் கீப்பர் வரிசையில் போச்சைய்யா கிருஷ்ணமூர்த்திக்கு தனியொரு இடம் உண்டு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.