HBD MS Dhoni: 'தோனி'! இது வெறும் பெயர் மட்டுமல்ல..! இந்தியர்களின் எமோஷன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Ms Dhoni: 'தோனி'! இது வெறும் பெயர் மட்டுமல்ல..! இந்தியர்களின் எமோஷன்

HBD MS Dhoni: 'தோனி'! இது வெறும் பெயர் மட்டுமல்ல..! இந்தியர்களின் எமோஷன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 07, 2023 05:15 AM IST

இந்த நூற்றாண்டில் தோனி தோனி என்ற உரிமை குரலுடன் கொண்டாடப்படும் விளையாட்டு வீரராக இருப்பவர் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி இந்தியர்களின் எமோஷன் ஆகவே இருந்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும எம்எஸ் தோனி

ஆனால் தோனி போல் ஆறு வயது முதல் அறுபது வயதுக்கும் மேல் வரை என அனைத்து வயதினராலும் கவரப்பட்ட வீரர் இல்லை என்பதை அடித்து சொல்லலாம். கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பகட்டத்தில் பல ஜாம்பவான்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியபோதிலும், கிரிக்கெட் விளையாட்டு நன்கு பிரபலமான பின்னர் எதிரணிகளை தனது அற்புத பேட்டிங்கால் திணறடித்த சுனில் கவாஸ்கர், 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் போன்ற சிலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களாக இருந்தனர்.

இவர்களை தொடர்ந்து சச்சின் டென்டுல்கர், இந்தியர்களை ஒருங்கணைக்கும் சக்தியாகவே திகழ்ந்தார். ஆனால் அவர் போன்ற ஆளுமை அணியில் இருக்கும்போது தனக்கென தனியொரு அடையாளத்தை, தனது தனித்துவமான பாணி ஆட்டத்தால் கொண்டு வந்த வீரர் என்ற பெருமையை பெற்றவராக தோனி திகழ்ந்தார்.

டிக்கெட் கலெக்டர், கால்பந்து கோல் கீப்பர் என இருந்த தோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக வந்தது தற்செயலாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னர் தோனி நிகழ்த்திய சம்பவங்கள், அதனால் கிடைத்த கேப்டன் பதவி, கேப்டனாக அவர் சாதித்த சாதனைகள் எல்லாம் வெறும் அதிர்ஷ்டம் என்று அவ்வளவு எளிதாக சொல்லவிடமுடியாத படி தனது ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் பின்னணியில் புத்தி கூர்மையை இடம்பெற செய்வதில் கொஞ்மும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டார் தோனி.

உலகக் கோப்பை 2007 தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் துவண்டு போய் இருந்த இந்திய ரசிகர்களை, கடினமான தருணத்தை முதல் டி20 உலகக் கோப்பையை பெற்று தந்து அவர்களை புத்துயிர் பெற வைத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்திய கிரிக்கெட்டின் ஒற்றை குரலாக ஒளிப்பதற்கான முதல் சம்பவத்தை இவ்வாறுதான் அரங்கேற்றினார்.

தனது இருப்பை ஒட்டு மொத்த உலகமே மிஸ் செய்யும் உணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தலைவனுக்கான உதாரணம். அந்த வகையில் தான் அணியில் இல்லாத வெற்றிடத்தை அணி வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் உணரும் விதமாக உணர்வை ஏற்படுத்திய ஒற்றை வீரராக இருந்து வருகிறார் தோனி

இந்திய கிரிக்கெட்டில் கபில், சச்சின் விட்ட இடத்தை தோனி நிரப்பினார். அவர்களைப் போல் ஒரு ஆல்ரவுண்டராக, பேட்ஸ்மேனாக என்று இல்லாமல் எல்லாம் சேர்ந்த ஒரு தலைவனாக அந்த இடத்துக்கு வந்தார், வென்றார். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவர் இன்னும் செல்லவில்லை என்பதை உண்மை.

எதிர்காலத்தில் இன்னொரு சிறந்த வீரர் தோனியின் இடத்துக்கு வரலாம். அதற்கும் அவர் தோனி வழியை பின்னபற்றியாக வேண்டும் என்ற கோட்பாட்டை வகுத்து சென்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் விளையாட்டில், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐசிசி கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருக்கிறார் தோனி. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் 5 கோப்பைகளை வென்ற கேப்டனாக இருந்து வரும் தோனி, 40 ப்ளஸ் வயதில் கோப்பையை வென்ற இந்திய கேப்டனாகவும் உள்ளார்.

நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடிய சிஎஸ்கே அணியின் போட்டிகள் நடைபெறும் மைதானம் ரசிகர்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தன. அவர் பேட் செய்ய வரும்போது ஒட்டுமொத்த மைதானமுமே சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சிகளுக்கு மாறி கடல் அலைகள் போல் துள்ளி குதித்ததில் இருந்தே தோனி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல மக்கள் மனதின் குரல் என்பதை புரிந்து கொண்டிருக்கலாம்.

இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் எம்எஸ் தோனியை அடுத்த ஐபிஎல் தொடரில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். அதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி சென்றிருப்பதால் தான் அவரது பெயர் ஒரு எமோஷனாகவே ஒலித்து கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.