Junior Asia Cup Hockey: பாகிஸ்தானை வீழ்த்தி நான்காவது முறையாக மகுடம் சூடிய இந்தியா
ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பத்தாவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனில் நடைபெற்றது. அங்குள்ள சலாலா நகரில் நடைபெற்ற போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை தட்டி சென்றது. இந்தப் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 எனவும், இரண்டாம் பாதியில் 2-0 எனவும் இந்திய அணி முன்னேறியது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது பாதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 2-1 என இருந்து. இதன்பின்னர் பரபரப்பாக நடைபெற்ற கடைசி பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தினர். இந்திய அணி கோல் அடிக்காத போதிலும், பாகிஸ்தான் அணியையும் கோல் அடிக்க விடாமல் தடுத்தது.
கடைசி கட்டத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் சூப்பராக முறியடித்தனர். இந்திய அணியில் அன்கட் பிர் சிங், அராஜீத் சிங் ஹன்டல் ஆகியோர் கோல் அடித்தனர். தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்திய அணி.
முன்னதாக மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் தென்கொரியா - மலேசியா அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.
டாபிக்ஸ்