Asian Womens Championships Hockey: தாய்லாந்துக்கு எதிராக முழு ஆதிக்கம்! 7-1 கோல் கணக்கில் இந்தியா வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Womens Championships Hockey: தாய்லாந்துக்கு எதிராக முழு ஆதிக்கம்! 7-1 கோல் கணக்கில் இந்தியா வெற்றி

Asian Womens Championships Hockey: தாய்லாந்துக்கு எதிராக முழு ஆதிக்கம்! 7-1 கோல் கணக்கில் இந்தியா வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 28, 2023 05:19 PM IST

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் மற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான், தென் கொரியா அணிகள் வென்றுள்ளன.

தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 கோல்கள் அடித்த இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி
தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 கோல்கள் அடித்த இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி

முதல் போட்டியானது இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையே ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது. சுமார் 18 மாதங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான சங்கீதா ஆட்டத்தின் 29, 45, 45 ஆகிய நிமிடங்களில் கோல்களை அடித்து அசத்தினார்.

உலக அளவில் 29வது இடத்தை பிடித்திருக்கும் தாய்லாந்து இந்தியாவுக்கு எதிரான முதல் கோல் அடித்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அந்த அணியின் சுபன்ஷா சமான்சோ கோல் அடித்தார். இந்தியா வீராங்கனையான மோனிகா 7வது நிமிடத்திலும், சலிமா டெடே 15வது நிமிடத்திலும், தீபிகா 40 மற்றும் லால்ரெம்சியாமி 52வது நிமிடத்தில் என கோல்களை அடித்தனர்.

இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய, தாய்லாந்து அணியின் தடுப்பாட்டத்தை தவிடுபொடியாக்கியது. அட்டாக்கிங் ஆட்டத்தை எந்த அச்சமும் இன்றி வெளிப்படுத்திய இந்தியா இந்த வெற்றியை பெற்றது.

தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் மேலும் பல கோல்களை அடிப்பதற்கான வாய்ப்புகள் உருவானபோதிலும் இந்திய அதை கோல் ஆக்க தவறியது. அதுவும் கோல்களாக மாறியிருந்தால் இந்திய அணி இரட்டை இலக்கத்தில் கோல் எடுத்திருக்கும்.

குறிப்பாக 6 பெணால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தபோதிலும், அதில் இந்தியா 5 வாய்ப்புகளை தவறவிட்டது. ஆண்கள் ஹாக்கி அணியை போல் மகளிர் ஹாக்கி அணியிலும் பொண்ல்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்தியா சிக்கலை சந்தித்து வருகிறது.

முன்னதாக, முதல் நாளில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஜப்பான் - மலேசியா, தென்கொரியா - சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், தென்கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.