Emerging Asia Cup: தரமான பவுலிங் - வங்கதேச ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ! பைனிலில் பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Emerging Asia Cup: தரமான பவுலிங் - வங்கதேச ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ! பைனிலில் பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதல்

Emerging Asia Cup: தரமான பவுலிங் - வங்கதேச ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ! பைனிலில் பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 21, 2023 11:51 PM IST

யாஷ் துல் பொறுப்பான பேட்டிங், நிஷாந்த் சிந்து துல்லியமான பவுலிங்கால் வங்கதேச ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ இறுதிக்கு முன்னேறி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்ள உள்ளது.

வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்தியா ஏ வீரர்கள்
வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்தியா ஏ வீரர்கள் (BCCI Twitter)

இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன.

வங்கதேச ஏ அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 49.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணியின் கேப்டன் யாஷ் துல் பொறுப்புடன் பேட் செய்து அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேசம் ஏ அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய முகமத் நயிம் - தான்ஸித் ஹாசன் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.

இவர்கள் அவுட்டான பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய தவறினர். வங்கதேச ஏ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக இந்திய ஏ பவுலர் நிஷாந்த் சிந்து பந்து வீசினார்.

இதனால் 34.2 ஓவரில் 160 ரனகளுக்கு வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. இதனால் இந்திய ஏ ஏ அணியும் அரையிறுதி போட்டியை வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. சிறப்பாக பவுலிங் செய்த நிஷாந்த் சிந்து 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தபடியாக மானவ் சுதர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய ஏ அணியை சரிவிலிருந்து மீட்ட யாஷ் துல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்ளும் இந்தியா ஏ அணி ஏற்கனவே லீக் சுற்று போட்டியில் அந்த அணியை வீழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.