Rohit Sharma: 'என்ன பாக்குற கிளம்பி வா'! இஷான் கிஷனை வெறுப்பேற்றிய ரோஹித் - ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: 'என்ன பாக்குற கிளம்பி வா'! இஷான் கிஷனை வெறுப்பேற்றிய ரோஹித் - ஏன் தெரியுமா?

Rohit Sharma: 'என்ன பாக்குற கிளம்பி வா'! இஷான் கிஷனை வெறுப்பேற்றிய ரோஹித் - ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 15, 2023 11:48 AM IST

அறிமுக போட்டியில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி சதமடித்து சாதித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். மற்றொரு அறிமுக வீரரான இஷான் கிஷன் ஒரு ரன் எடுத்த உடனேயே இன்னிங்ஸை டிக்ளேர் செய்து வெறுப்பேற்றியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்தியா இன்னிங்ஸ் டிக்ளேர் செய்வதற்கு முன் இஷான் கிஷனை பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த ரோஹித் ஷர்மா
இந்தியா இன்னிங்ஸ் டிக்ளேர் செய்வதற்கு முன் இஷான் கிஷனை பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த ரோஹித் ஷர்மா

இதைத்தொடர்ந்து மற்றொரு அறிமுக வீரரான இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். முதல் போட்டி என்பதால் பொறுப்புடனும், நிதானமாகவும் விளையாடிய அவர் 17 பந்துகளில் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ரன்னை அடித்தார்.

அவ்வளவுதான் 20 பந்துகளில் இஷான் கிஷன் 1 ரன் எடுத்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. டிக்ளேருக்கு முன் கேப்டனை நோக்கி கிஷன் பார்க்க, என்ன பாக்குற கிளம்பி வா என்பது போல் அ்வர் செய்கை காட்டிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முதல் போட்டியில் எதாவது சாதிக்க வேண்டும் களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் நினைப்பது இயல்புதான். அந்த வகையில் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்த ஆடுகளத்தில் கவனமாக பேட் செய்து, போதிய நேரம் எடுத்துக்கொண்டு ரன் அடித்தார் கிஷன்.

அத்துடன் இந்த போட்டியில் இந்தியா வலுவான நிலையில் இருந்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாள் ஆட்டமும் மீதமிருக்க இஷான் கிஷனை பேட் செய்ய வைப்பதற்கான வாய்ப்பு இருந்து, ஆடுகளம் ஸ்பின் பவுலிங்குக்கு சாதகமாக இருப்பதை கணித்த ரோஹித் ஷர்மா இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளார்.

 

சரியாக தேநீர் இடைவேளைக்கு சுமார் 40 நிமிடங்கள் முன் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டாவது இன்னிங்ஸை தொடர வைத்தது இந்திய அணி. இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திய இந்திய தேநீர் இடைவேளைக்கு முன்னர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

அத்துடன் கேப்டன் ரோஹித் ஷர்மா எடுத்து முடிவு சரி என்பதுபோல், மூன்றாம் நாள் முடிவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆல்அவுட்டானதுடன், இந்தியா இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றது.

போட்டியின் முடிவுக்கு பின்னர் டிக்ளேர் முடிவு பற்றியும், இஷான் கிஷனிடம் வெளிப்படுத்திய ரியாக்‌ஷன் குறித்து ரோஹித் ஷர்மாவிடம் கேட்டபோது, " நான் இஷானிடம் டிக்ளேர் செய்வதற்கு இன்னும் ஒரு ஓவர்தான் மீதமுள்ளது. எனவே அதற்குள் ஒரு ரன் அடித்து தனிப்பட்ட சாதனையை செய்துகொள்ளவதற்காக அப்படி செய்கை செய்தேன். இஷான் பேட்டிங் செய்வதில் ஆவலாக இருப்பார் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற தருணங்கள் எரிச்சலூட்டும் என்பதும் தெரியும்" என்றார்.

இந்த போட்டியில் இஷான் கிஷன் பேட்டிங்கில் ஜொலிக்க வாய்ப்பு அமையாதபோதிலும், விக்கெட் கீப்பிங்கில் 2 கேட்ச்களை பிடித்து கணிசமான ரன்களையும் தடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.