IND vs WI 3rd T20: திருப்புமுனை தந்த குல்தீப் - அதிரடியாக பினிஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல்
இன்றைய போட்டியில் களமிறங்கிய ஸ்பின்னரான குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களின் அதிரடியான பினிஷ் மூலம் இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.
இதையடுத்து இந்திய அணி அறிமுக வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பவுலிங்கில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஓபனிங் விக்கெட்டுக்கு பிரண்டான் கிங் - கெய்ஸ் மேயர்ஸ் 55 ரன்கள் குவித்தனர். மேயர்ஸ் 25 ரன்களில் அவுட்டாக, அடுத்து பேட் செய்ய வந்த சார்லஸ் 12, பூரான் 20 என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் அவுட்டானர்கள்.
நிதானமாக பேட் செய்து ரன்குவித்து வந்த பிரெண்டான் கிங் 42 ரன்கள் அவுட்டானார். 15 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவரில் கேப்டன் ரோவ்மன் பவல் அதிரடியால் 43 ரன்கள் எடுத்தது.
கடைசிகட்டத்தில் அணிக்கு சிறப்பான பினிஷ் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பவல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பவுலர்களில், இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்ட குல்தீப் யாதவ் தனது தேர்வை நியாயப்படுத்தும் விதமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்ஷர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீத்தினர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஓவரை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். இந்த தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட ரன்களை விட அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியும். இனி இந்திய பேட்டர்களின் கையில்தான் ஆட்டம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்