IND vs WI 2nd T20: மீண்டும் சொதப்பிய இந்திய அணி..தட்டி தூக்கிய வெஸ்ட் இண்டீஸ்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 2nd T20: மீண்டும் சொதப்பிய இந்திய அணி..தட்டி தூக்கிய வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI 2nd T20: மீண்டும் சொதப்பிய இந்திய அணி..தட்டி தூக்கிய வெஸ்ட் இண்டீஸ்!

Karthikeyan S HT Tamil
Aug 07, 2023 06:15 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். சூர்யகுமார், சுப்மன் கில், சஞ்சு சாம்சன்

இதனை தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் நிகோலஸ் பூரான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையேயான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.