IND vs WI 2nd T20: டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்.. நட்சத்திர வீரருக்கு காயம்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
முதல் டி20 இல் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி கட்டாயம் இந்த ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் இந்திய அணியின் ஆடும் லெவலில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விபரம்:
ஷுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முன்னதாக, முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர்களின் உற்சாகமான பந்துவீச்சுதான் தோல்வியில் இருந்து அபார வெற்றியைப் பெற்று தந்தது. எதிரணி பேட்டிங் ஆர்டரை உடைத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு கடுமையாக உழைத்தது.
இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ரோவ்மன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, வரும் ஆட்டங்களில் சொந்த மண்ணில் தனது வெற்றி சாதனையை விரிவுபடுத்தும் முனைப்பில் உள்ளது.
அதேசமயம், இந்திய அணி இந்த தொடரில் சமநிலைக்கு திரும்புவதற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். எனவே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்