IND vs WI 2nd Odi: அணிக்கு திரும்பினார் சாம்சன்! இரண்டு டாப் வீரர்கள் அவுட் - இந்திய அணியில் மாற்றங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 2nd Odi: அணிக்கு திரும்பினார் சாம்சன்! இரண்டு டாப் வீரர்கள் அவுட் - இந்திய அணியில் மாற்றங்கள் என்ன?

IND vs WI 2nd Odi: அணிக்கு திரும்பினார் சாம்சன்! இரண்டு டாப் வீரர்கள் அவுட் - இந்திய அணியில் மாற்றங்கள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 29, 2023 07:19 PM IST

ஒன்பது மாதங்களுக்கு பிறகு இந்தியா ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். மிக முக்கியமாக கோலி, ஜடேஜா என இரண்டு டாப் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இந்திய ஒரு நாள் அணியில் 9 மாதங்கள் கழித்து மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்
இந்திய ஒரு நாள் அணியில் 9 மாதங்கள் கழித்து மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்

இன்றைய போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றமாக கேப்டன் ரோஹித் ஷர்மா, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக அணியில் அக்‌ஷர் படேல், சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்திய அணியில் ஒன்பது மாதங்கள் கழித்து ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். கடைசியாக இவர் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றார்.

இந்திய அணி விவரம்: இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.