Ind vs Aus: டாஸ் வென்ற ஆஸி., ஃபீல்டிங் தேர்வு.. இந்தியாவுக்கு சாதகமா?
India vs Australia, 2nd ODI: விசாகப்பட்டினத்தில் முதலில் பவுலிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக ஆடுகளம் அமைந்திருந்தது.
இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை ரன்குவிப்பில் ஈடுபடவிடாமல் திணறடித்தனர். ஆனால் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் சொந்த காரணங்களால் விளையாடாத கேப்டன் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்புகிறார்.
இன்றைய போட்டியில் தோல்வியை தழுவினால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலியா அணி சரியான காம்பினேஷனில் அணியை உருாக்கி வெற்றிக்காக உறுதியுடன் போராடும் என நம்பப்படுகிறது.
அந்த அணியிலும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ் முதல் போட்டியில் 81 ரன்களை குவித்து அணியின் டாப் ஸ்கோரராக இருப்பதுடன் தனது பார்மையும் நிருபித்தார்.
இவரை போல் காயத்திலிருந்து அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அவர் தன்னை நிருபிக்க போராடுவார்.
பிட்ச் எப்படி?
அதிக ரன்கள் குவிக்கும் விதமாக பேட்ஸ்மேன்களின் சொர்ககபுரியாக இருந்து வரும் விசாகபட்டினம் ஓய்எஸ்ஆர் மைதானத்தில் இந்தியா விளையாடியிருக்கும் 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் விளையாடி ஆறு போட்டிகளில் கோலி மூன்று சதமும், இரண்டு அரைசதமும் அடித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் முதலில் பவுலிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 9 முறை முதலில் பவுலிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 3 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி இந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.