French Open 2023: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்.. 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரான்சின் தலைநகர் பாரிசில் ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் இரு வாரங்கள் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று நடைப்பெற்று வருகிறது.
நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் போலாந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் கிளாரிலுவை வீழ்த்தி 3ஆவது சுற்றுக்குள் கால்பதித்தார். இந்த சீசனில் அவரது 30-வது வெற்றி இதுவாகும். 22 வயதான ஸ்வியாடெக் 3ஆவது சுற்றில் சீனாவின் வாங்ஸின்யுடன் மோதுகிறார்.
விம்பிள்டன் சாம்பியனும், 4-ஆம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லின்டா நோஸ்கோவாவையும் (செக்குடியரசு), அமெரிக்காவின் கைலாடே 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சையும் விரட்டினர்.
இதே போல் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை அடைந்த 16 வயதான ரஷ்யாவை சேர்ந்த மிரா ஆன்ட்ரீவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்ஸை சேர்ந்த டைனே பாரியை தோற்கடித்து 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் இளம் வயதில் 3-வது சுற்றை எட்டியவர் என்ற சிறப்பை மிரா ஆன்ட்ரீவா பெற்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9