ICC: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு ஐசிசி வைத்த செக்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Icc: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு ஐசிசி வைத்த செக்

ICC: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு ஐசிசி வைத்த செக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 03, 2023 02:27 PM IST

உலக கோப்பை 50 ஓவர் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு தங்களது அணி விளையாடும் வீரர்களின் இறுதி பட்டியலை வழங்குவதற்கான கடைசி தேதியை ஐசிசி அறிவித்துள்ளது.

உலக கோப்பை விளையாடும் அணிகள் தங்களது அணி வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான தேதியை ஐசிசி அறிவித்துள்ளது
உலக கோப்பை விளையாடும் அணிகள் தங்களது அணி வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான தேதியை ஐசிசி அறிவித்துள்ளது

தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதேபோல் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, உலக கோப்பை தொடரின இறுதிப்போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதைத்தொடர்ந்து உலக கோப்பை தொடரில் பங்குபெறும் அணிகளுக்கு ஐசிசி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அந்த வகையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது உலக கோப்பை தொடருக்கான அணியை விரைவில் தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த முறை உலக கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2019 உலக கோப்பை தொடர்போல் இந்த முறையும் ரவுண்ராபின் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஐசிசியின் இந்த அறிவிப்பையொட்டி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் தங்களது உலக கோப்பை அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இதற்கு இடைப்பட்ட காலத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு அடுத்தபடியாக நடைபெறும் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி தான் தொடங்குகிறது.

எனவே அதற்கு முன்னர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதுடன் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.