ICC Rankings: டெஸ்ட் பவுலர்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்த அஸ்வின்; ரஹானேவுக்கு எந்த இடம்?
Ravichandran Ashwin: டாப் 10 பவுலர்ஸ் தரவரிசையில் பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
WTC Final-இல் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
ஆனாலும், அஸ்வின் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். அவர் மொத்தம் 860 புள்ளிகளுடன் உள்ளார்.
2021-23 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா (67 விக்கெட்), ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (88 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அஸ்வின் மூன்றாவது இடத்தில் உள்ளார். 13 போட்டிகளில் 19.67 சராசரி மற்றும் 2.48 எகானமி ரேட்டில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/91 ஆகும்.
டெஸ்ட் பவுலர்ஸ் வரிசையில் 2வது இடத்தில் இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸி., கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டாப் 10 பவுலர்ஸ் தரவரிசையில் பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா (729 புள்ளிகள்), விராட் கோலி (700 புள்ளிகள்) முறையே 12 மற்றும் 13வது இடத்தில் உள்ளனர். WTC Final போட்டியில் ரோஹித் 15 மற்றும் 43 ரன்கள் எடுத்தார். ஆஸி.க்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் 14 மற்றும் 49 ரன்கள் எடுத்தார்.
ரஹானே 37வது இடத்தைப் பிடித்தார். ஷர்துல் தாக்குர் 94 வது இடத்துக்கு முன்னேறினார். ரஹானே, 89, 46 ரன்களை முறையே முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் பதிவு செய்தார்.
அஸ்வின், டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இன்றிரவு திண்டுக்கல், திருச்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்