ICC Cricket World Cup: சென்னையில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகள் எத்தனை?
Chennai: முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது.
ஒட்டமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி கிரிக்கெட் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை இன்று வெளியானது.
முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2019 உலகக் கோப்பை ரன்னர்-அப் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எத்தனை, இங்கு எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்பது போன்ற விவரங்களை பார்ப்போம் வாருங்கள்.
சென்னையில் அக்டோபர் 8ம் தேதி இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை வங்கதேசமும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்தும், ஆப்கனும் சென்னையில் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி ஆப்கன், பாகிஸ்தான் மோதும் போட்டி பிற்பகல் 2 மணிக்கும், அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆட்டமும் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது.
பைனல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
டாபிக்ஸ்