Football: ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்தியர்
"நான் பெரும்பாலும் பயிற்சிக்காக முதலில் களத்திற்குச் செல்கிறேன்."
ஐரோப்பா கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் கால்பந்து வீராங்கனை மனிஷா கல்யாண்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனிஷா கல்யாண். யுஇஎஃப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மனிஷா பெற்றுள்ளார்.
பிரேசிலுக்கு எதிராக கோல் அடித்த முதல் இந்தியர் இவர்தான். இந்த வாரம் ஜார்ஜியாவின் டபிள்யூ.எஃப்.சி சாமேக்ரெலோவுக்கு எதிராக அப்போலோன் லேடீஸ் எஃப்.சிக்காக யுஇஎஃப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக்கில் கோல் அடித்த முதல் இந்தியர் ஆவார்.
அவர் சைப்ரஸிலிருந்து www.the-aiff.com-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஹோஷியார்பூரில் உள்ள எனது சிறிய கிராமத்திலிருந்து சைப்ரஸில் உள்ள அப்போலோன் லேடீஸ் எஃப்சிக்கு செல்வது எனது வாழ்க்கைக்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நான் பெரும்பாலும் பயிற்சிக்காக முதலில் களத்திற்குச் செல்கிறேன், கடைசியாக வெளியேறுகிறேன். இது எனது கடின உழைப்புக்கு போதுமான சான்றாகும், அது ரிசல்ட்டைக் கொண்டு வந்தது. அசைக்க முடியாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியால் இதை ஈட்டினேன்.
ஆனாலும், நான் திருப்தியடையவில்லை, நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
நான் கூறியது போல, நான் குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்துள்ளேன். அந்த தியாகங்கள் வீணாகாமல் இருக்க இங்கே எனது கவனம் அவசியம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். குறிப்பாக என் தந்தை விபத்தில் சிக்கிய பிறகு, நிதி நிலையற்ற தன்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகளை சமாளிப்பது மிகவும் கடினமான பயணமாக இருந்தது.
இந்த தியாகங்கள் ஒரு உந்து சக்தியாக செயல்படுகின்றன, என் தீர்மானத்தை வலுப்படுத்துகின்றன மற்றும் எந்தவொரு தடையையும் எதிர்கொள்ள என் மனதை தயார்படுத்துகின்றன என்றார் மனிஷா.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்