HT Sports SPL: இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக சதங்களை பதிவு செய்த வீரர்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Spl: இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக சதங்களை பதிவு செய்த வீரர்கள் லிஸ்ட்

HT Sports SPL: இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக சதங்களை பதிவு செய்த வீரர்கள் லிஸ்ட்

Manigandan K T HT Tamil
Jul 25, 2023 06:10 AM IST

Most centuries agains india: இந்தியா போன்ற வலிமையான அணிக்கு எதிராக பல முறை சதம் விளாசுவது பெரிய சாதனை ஆகும்.

ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், விவியன் ரிச்சர்ட்ஸ்
ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், விவியன் ரிச்சர்ட்ஸ்

கிரிக்கெட்டில் சவாலான போட்டி டெஸ்ட். டெஸ்ட் என்பதன் அர்த்தமே சோதனை என புரிந்து கொள்ளலாம். எதிரணியின் பவுலிங்கை சமாளித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசுவது என்பது மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.

அதிலும் இந்தியா போன்ற வலிமையான அணிக்கு எதிராக பல முறை சதம் விளாசுவது பெரிய சாதனை ஆகும்.

ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜோ ரூட், 2012இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்டில் அறிமுகமானதே இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தான்.

அவர் இந்தியாவுக்கு எதிராக இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9 சதங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் நமது அணிக்கு எதிராக மட்டும் 2526 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 63.15. நமது அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் 218.

ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

அவர் மொத்தம் 2042 ரன்களை நமது அணிக்காக பதிவு செய்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 65.87. இவரது அதிகபட்ச ஸ்கோர் 192.

கேரி சோபர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி சோபர்ஸ், இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக 18 ஆட்டங்களில் விளையாடி, 1920 ரன்களை குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 83.48. இந்தியாவுக்கு எதிரான இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 198.

விவியன் ரிச்சர்ட்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், 28 டெஸ்டுகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி, 1927 ரன்களை குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 50.71. இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 192 நாட் அவுட்.

ரிக்கி பாண்டிங்

இந்த வரிசையில் அடுத்து உள்ள வீரர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங். இவர் இந்தியாவுக்கு எதிராக 29 ஆட்டங்களில் விளையாடி, 2555 ரன்களை குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி, 54.36. இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.