HT Sports Special: களத்தில் சுயநினைவை இழந்த பின்னும் உலகின் சிறந்த விக்கெட் கீப்பராக ஜொலித்தவர்! அப்படி என்ன செய்தார்?
போரில் இருந்து உயிர்பிழைத்து, கிரிக்கெட் களத்தில் பந்து தலையில் பட்டதால் சுயநினைவை இழந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பெர்ட் ஓல்ட்ஃபீல்ட் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக உள்ளார். அப்படி என்ன செய்தார் இவர் என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 1894இல் பிறந்த இவர் இளவயதில் ஆஸ்திரேலியா ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது முதலாம் உலகப் போர் நடைபெற எதிரி நாட்டில் தாக்குதலின் போது Shell shock என்ற பாதிப்புக்கு உள்ளானார். குண்டுவீச்சு மற்றும் சண்டையின் தீவிரத்தின் எதிர்வினையாகும், ஒருவித மனஉளைச்சலை Shell shock என அழைத்தார்கள்.
அந்த பாதிப்பிலிருந்து மீளும் விதமாக கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தினார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா ராணுவ கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியா இம்பீரிய் போர்சஸ் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். 1920களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலியா தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் விளையாடியுள்ளார்.
இதன்பின்னர் 1924-25 ஆஷஷ் தொடரில் விளையாடிய இவர் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டு 1932-33இல் நடைபெற்ற பாடிலைன் சீரிஸ் டெஸ்ட் தொடரில் விளையாடினார். இந்த தொடரில் பேட்ஸ்மேன்களின் உடலை குறிவைக்கும் விதமாக பாடிலைனில் பந்து வீசும் யுக்தியை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பின்பற்றினர். அப்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்து ஓல்ட்ஃபீல்ட் தலையில் பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து, சுயநினைவின்றி மைதானத்தில் இருந்து தூக்கி செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக காயம் பெரிதாக இல்லாமல் உயிர் பிழைத்தார்.
பேட்டிங்கை காட்டிலும் விக்கெட் கீப்பங்கில் ஜொலித்தார் ஓல்ட்ஃபீல்ட். ஸ்டம்பிங் செய்வதில் வல்லவராக இருந்த இவர் 54 சர்வதேச போட்டிகளில் 78 கேட்ச்களும், 52 ஸ்டம்பிங்கும் செய்திருந்தார். இதில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கிளாரி கிரிம்மெட்டை மட்டும் 28 முறை அவுட்டாக்கியிருந்தார். 54 போட்டிகளில் 52 ஸ்டம்பிங் என்பது அந்த காலகட்டத்தில் பெரும் சாதனையாக இருந்ததோடு மட்டுமில்லாமல் பல தசாப்பதங்களுக்கு பிறகே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
245 முதல் தர போட்டிகளில் 399 கேட்ச்களை பிடித்தும், 263 ஸ்டம்பிங்கும் இவர் செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளாராக செயல்பட்டார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என பெயரெடுத்த பெர்ட் ஓல்ட்ஃபீல்ட் நினைவு நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்