Hockey Men Junior World Cup: கனடாவை வீழ்த்திய இந்தியா! காலிறுதிக்கு தகுதி
இந்திய வீரர்கள் ஆதித்யா அர்ஜுன் லாலகே, ரோஹித், அமன்தீப் லக்ரா, விஷ்ணுகாந்த், ராஜிந்தர், குஷ்வாஹா, உத்தம் சிங் ஆகியோர் கோல்கள் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.
எஃப்ஐஎச் ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலாம்பூரில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தியா தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சி பிரிவில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய வீரர்களில் ஆதித்யா அர்ஜுன் லாலாகே 8, 43, ரோஹித் 12, 55, அமன்தீப் லக்ரா 23, 51, விஷ்ணுகாந்த் 42, ராஜிந்தர் 42, குஷ்வஹா செளரப் ஆனந்த் 51, உத்தம் சிங் 58 ஆகியோர் கோல் அடித்தனர். கனடா அணியில் ஜுட் நிகோல்சன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
முந்தைய லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்தியா, கனடாவுக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுத்து வெற்றியை பதிவு செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்