Hockey India: தென்னாப்பிரிக்காவில் 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி: 26 பேர் கொண்ட அணியை அறிவித்தது இந்தியா-hockey india announces 26 member squad for four nation series in south africa read more details - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hockey India: தென்னாப்பிரிக்காவில் 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி: 26 பேர் கொண்ட அணியை அறிவித்தது இந்தியா

Hockey India: தென்னாப்பிரிக்காவில் 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி: 26 பேர் கொண்ட அணியை அறிவித்தது இந்தியா

Manigandan K T HT Tamil
Jan 10, 2024 03:31 PM IST

“தரமான அணிகளுடன் விளையாடும் சீசனில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்”

ஹாக்கி இந்தியா அணியினர் (PTI Photo/R Senthil Kumar)
ஹாக்கி இந்தியா அணியினர் (PTI Photo/R Senthil Kumar) (PTI)

இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குவார், மேலும் எஃப்ஐஎச் சிறந்த வீரரான ஹர்திக் சிங் துணை கேப்டனாக பொறுப்பேற்பார். இளம் வீரர்கள் ஆரைஜீத் சிங் ஹண்டல் மற்றும் பாபி சிங் தாமி ஆகியோர் ஜூனியர் இந்திய அணியுடன் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜர்மன்பிரீத் சிங், ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுமித், சஞ்சய் மற்றும் ரபிச்சந்திர சிங் மொய்ராங்தெம் ஆகியோருடன் கோல்கீப்பர்கள் பிஆர் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதக் மற்றும் பவன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், விஷ்ணுகாந்த் சிங், ஹர்திக் சிங் மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நடுகள வீரர்கள். முன்வரிசையில் மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், ஆரைஜீத் சிங் ஹண்டால், போபி சிங் தாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடரைப் பற்றி தலைமைப் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் கூறுகையில்,  "ஒலிம்பிக் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நாங்கள் தரமான அணிகளுடன் விளையாடும் சீசனில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். நாங்கள் ஒரு பெரிய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கிற்கு முன்னதாக, போட்டி முறையில் விளையாடும் சில வீரர்களைப் பார்க்க இது எனக்கு வாய்ப்பளிக்கும். நாங்கள் டூர் செல்வதற்கு முன் பெங்களூரு SAI இல் ஒரு சிறிய பயிற்சி முகாம் உள்ளது. சீனியர் அணியில் இரண்டு இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்." என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், கிரிஷன் பகதூர் பதக், பவன்

டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஜுக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமா, சுமித், சஞ்சய், ரபிச்சந்திர சிங் மொய்ராங்தெம்

மிட்பீல்டர்கள்: விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், விஷ்ணுகாந்த் சிங், ஹர்திக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங்

முன்கள வீரர்கள்: மந்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், ஆரைஜீத் சிங் ஹண்டால், போபி சிங் தாமி. 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.