HBD Archana Suseendran: தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்று தந்த தமிழக வீராங்கனை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Archana Suseendran: தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்று தந்த தமிழக வீராங்கனை!

HBD Archana Suseendran: தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்று தந்த தமிழக வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Jun 09, 2023 06:10 AM IST

Track and field: இவரது கரியர் பெஸ்ட் 11.49 விநாடிகளில் 100 மீட்டரை அடைந்தது ஆகும்.

தடகள வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன்
தடகள வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன்

இவர் ஜூன் 9ம் தேதி 1994ம் ஆண்டு பிறந்தார். 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.80 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் இலங்கை வீராங்கனை அமாஷா டி சில்வாவை வீழ்த்தினார்.

இவரது கரியர் பெஸ்ட் 11.49 விநாடிகளில் 100 மீட்டரை அடைந்தது ஆகும். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

200 மீட்டர் ஓட்டத்தில் 23.18 விநாடிகளில் இலக்கை அடைந்தது இவரது மற்றொரு பெஸ்ட் ஆகும்.

இதேபோல், 400 மீட்டர் ஓட்டத்தில் 56.90 விநாடிகளிலும், 4*100 ஓட்டத்தில் 43.37 விநாடிகளிலும் இலக்கை எட்டியது கரியர் பெஸ்ட்டாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு நடந்தது.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னணி தடகள வீராங்கனை ஹிமாதாஸ், தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உள்பட ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் முன்னணி வீராங்கனை ஹிமாதாசிற்கு மிகவும் போட்டியாக விளங்கிய தமிழக வீராங்கனை அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23.06 விநாடிகளில் 200 மீட்டர்களை கடந்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

தடகள போட்டியில் ஜெயிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மிகவும் கடின உழைப்பு தேவை. நீண்ட நேர பயிற்சி தேவை. இவை அனைத்தும் செய்து முடிக்க நல்ல கோச் தேவை. நல்ல உணவும் மிக மிக அவசியம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.