India wins Bronze: கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள்..ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி! இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்-harmanpreet shines as india beat spain 2 1 to clinch mens hockey bronze - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Wins Bronze: கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள்..ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி! இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்

India wins Bronze: கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள்..ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி! இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2024 11:21 AM IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள் அடிக்க, இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் பதக்கத்துடன் இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் விடைபெற்றார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள், ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியாவுக்கு வெண்கலம்
கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்கள், ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியாவுக்கு வெண்கலம் (AP)

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடித்த இரண்டு அற்புதமான கோல்களால், ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.  இதன் மூலம் ஒலிம்பிக்கில் விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 13வது பதக்கத்தையும், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கமும் வென்றது. 

பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் இந்தியா பெற்ற நான்காவது பதக்கமாக இது அமைந்துள்ளது. 

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பயணம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறுவதற்கான இந்திய அணியின் பயணம் சிறப்பாகவே இருந்தது. இந்தியா தனது குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியா, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் பின்னர் கிரேட் பிரிட்டனுக்கு எதிராக இந்தியா மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றது. 

அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அடித்த கோல்கள், தங்க பதக்கம் மீதான இந்தியாவின் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அணியின் போராட்ட குணம் குறையாமல் இருந்தது.

ஸ்பெயின் ஆதிக்கம்

வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தொடக்க 30 நிமிடங்களில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது, அதிக ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியது. ஸ்பெயின் அணியின் ஆக்ரோஷமான அணுகுமுறை காரணமாக, இந்திய பாதுகாப்பான தடுப்பாட்டம் ஆட வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகியது, மேலும் அதேபோல் கோல் முயற்சியின்போது சரியான நேரத்தில் ஸ்பெயின் வீரர்களின் குறுக்கீடுகள் இந்தியாவின் தாக்குதல் வீரர்களை விரக்தியடையச் செய்தன.

ஸ்பெயினுக்கு பெனால்டி ஸ்டிரைக் கிடைக்க, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் அந்த அணி வீரர் மார்க் மிரல்லெஸ் கோல் ஆக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 

பின்னடைவு ஏற்பட்டாலும், முதல் பாதி முடிய 21 விநாடிகள் எஞ்சியிருந்த நிலையில், இந்திய வீரர் அடித்த பந்து கோல் வட்டத்துக்குள் இருந்த ஸ்பெயின் டிஃபெண்டர் பெப்பே குனிலின் காலில் பட்டது. இதனால் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. கேம்ஸ் முழுவதும் பெனால்டி கார்னர்களை சிறப்பாக மாற்றிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், முதல் பாதி முடிவதற்கு முன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்கோர் எடுத்து சமன் செய்தார். 

இந்திய வீரர்கள் ஆக்ரோஷம்

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் உத்வேகம் பெற்று ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு கைமல் பலனும் கிடைத்தது. ஹர்மன்பிரீத் மீண்டும் தனது திறமையை நிரூபித்து, மற்றொரு பெனால்டி கார்னர் கோலை அடித்து இந்தியா முன்னிலை பெற செய்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்பெயின் மேலும் பல வாய்ப்புகளை உருவாக்கி அவசர அவசரமாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்டம் உறுதியுடன் இருந்தது. ஸ்பெயின் அணியினர் தாக்குதல்களை திறம்பட முறியடித்தது. ஆட்டத்தின் நான்காம் கால்பகுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர்கள் வெளிப்படுத்திய அழுத்தத்தை இந்திய வீரர்கள் தாங்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்-தாக்குதல்களால் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களையும் அளித்தனர். இறுதியில் முழு ஆட்ட நேர முடிவில் ஒரு கோல் முன்னிலை பெற்ற இந்தியா வெற்றி பெற்று பதக்கத்தை தன் வசமாக்கியது

விடைபெற்றார் ஸ்ரீஜேஷ்

இந்தியாவின் வெண்கலப் பதக்கப் வெற்றிக்கு உறுதுணையாகவும், பல புகழ்பெற்ற வெற்றிக்கு பங்களிப்பு தந்த கோல் கீப்பர்ன பிஆர் ஸ்ரீஜேஷ் இந்த வெற்றியுடன் சர்வதேச ஹாக்கி விளையாட்டில் இருந்து விடை பெற்றார். 

கோல் கீப்பரான இவர் 2006இல் அறிமுகமானார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், வெண்கலம் வென்ற அணியின் முக்கிய அங்கமாக இருந்தார்.

இதுமட்டுமில்லாமல் இந்திய ஹாக்கி அணியின் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்களிப்பு ஆற்றிய ஸ்ரீஜேஷ், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன் ரசிகர்களை பார்த்து கையசைத்து விடை பெற்றுள்ளார்.

ஸ்ரீஜேஷ்க்கு அர்பணிப்பு

இந்திய அணி சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 30 மற்றும் 33-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஸ்பெயின் தரப்பில் மார்க் மிரால்ஸ் 18வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கியின் அனுபவம் வாய்ந்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சர்வதேச ஹாக்கியில் இருந்து குட்பை கூறினார். இந்திய கோல்கீப்பருக்கு இது கடைசி சர்வதேச போட்டியாகும். இந்த வெற்றியை வீரர்கள் ஸ்ரீஜேஷுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.