HBD Harbhajan Singh: சுழல் பந்துவீச்சில் தொடங்கி மாநிலங்களவை உறுப்பினரானது வரையிலான ஹர்பஜன் சிங்கின் பயணம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Harbhajan Singh: சுழல் பந்துவீச்சில் தொடங்கி மாநிலங்களவை உறுப்பினரானது வரையிலான ஹர்பஜன் சிங்கின் பயணம்

HBD Harbhajan Singh: சுழல் பந்துவீச்சில் தொடங்கி மாநிலங்களவை உறுப்பினரானது வரையிலான ஹர்பஜன் சிங்கின் பயணம்

Manigandan K T HT Tamil
Jul 03, 2023 05:15 AM IST

முதலில் பேட்ஸ்மேனாகவே பயிற்சி எடுத்தார். ஆனால், பின்னர் சுழல்பந்து வீச்சாளராக பரிணமிக்கத் தொடங்கினார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

அப்படிப்பட்ட சுழல் மன்னன் ஹர்பஜன் சிங்கின் பிறந்த தினம் இன்று. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் 1980ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பிறந்தார் ஹர்பஜன் சிங்.

இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் ஆவார். 5 சகோதரிகளுடன் வளர்ந்தார் ஹர்பஜன். இவருடைய தந்தைதான் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறும் இந்திய அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்றும் ஊக்கம் கொடுத்தார்.

முதலில் பேட்ஸ்மேனாகவே பயிற்சி எடுத்தார். ஆனால், பின்னர் சுழல்பந்து வீச்சாளராக பரிணமிக்கத் தொடங்கினார்.

2000 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, ஹர்பஜன் குடும்பப் பொறுப்பை ஏற்றார். மேலும் 2001 ஆம் ஆண்டில் தனது மூன்று சகோதரிகளுக்கு திருமணங்களை ஏற்பாடு செய்தார்.

2002 ஆம் ஆண்டில் 2008 ஆம் ஆண்டு வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவர் கூறியிருந்தார்.

1998ம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரிலும், 2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தின்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

சக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை ஒரு முறை கன்னத்தில் அடித்து சர்ச்சைக்குள்ளானார். பின்னர், இருவரும் பேசி சமரசம் அடைந்தனர். தற்போது விளம்பரப் படங்களில் கூட நடித்தனர்.

டெஸ்டில் மொத்தம் 103 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளையும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 236 ஆட்டங்களில் விளையாடி 269 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் ஆடி, 25 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 

பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டுவரும் ஹர்பஜன் சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.