Grand Master M. R. Lalith Babu Birthday: நார்வே ஒலிம்பியாடில் வெண்கலம் வென்றவர்! கார்ல்சனை வீழ்த்திய இந்தியர்
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டராகவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பதக்கங்களை குவித்தவரவாக இருந்து வருகிறார் ஆந்திராவை சேர்ந்த எம்.ஆர். லலித் பாபு.
இந்தியாவின் இளம் செஸ் வீரராக இருந்து வரும் எம்.ஆர். லலித் பாபு, கிராண்ட் மாஸ்டராகவும் இருந்து வருகிறார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், அங்கிருந்து கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த நான்காவது வீரராக உள்ளார்.
காமென்வெல்த் போட்டிகளில் தங்கம், ஆசிய போட்டியில் வெள்ளி, 2017 இந்திய செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் என பல கவனத்தை ஈர்க்கும் வெற்றிகளை குவித்துள்ளார் லலித் பாபு. அதேபோல் தேசிய அளவில் பல்வேறு பட்டங்களையும், கோப்பைகளையும் வென்று குவித்துள்ளார்.
2014 முதல் இந்தியா அணிக்காக நார்வேயில் நடைபெற்ற 41வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றார் லலித் பாபு. அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர் வெண்கல பதக்கமும் வென்றார்.
2012இல் கிராண்ட மாஸ்டர் பட்டத்தை வென்ற லலித் பாபு தற்போதைய ஃபிடே ரேட்டிங்கில் 2525ஐ பெற்றுள்ளார். இவரது அதிகபட்ச ரேட்டிங் கடந்த 2019 மார்ச்சில், 2594ஆக இருந்துள்ளது.
2008 முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் லலித் பாபு, இந்தியா அணியின் முக்கிய செஸ் வீரராக இருந்து வருகிறார். லிம்கா புக் ரெக்கார்டில் இடம்பிடித்திருக்கும் லலித் பாபு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் 49 பதக்கங்களை வென்றிருக்கிறார்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற செக் குடியரசு ஓபன் ஜி1 ரேபிட் 2023 தொடரில் ஆதிக்கம் செலுத்திய இவர், 9க்கு 8 வெற்றிகளை பெற்ற முதலிடம் பிடித்தார். அத்துடன் ஒரு சுற்று மீதமிருக்க தொடரை கைப்பற்றினார்.
உலகின் டாப் வீரரான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த இந்திய வீரராக லலித்பாபு திகழ்கிறார். இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவராகவும், வெற்றிகரமான வீரராக இருந்து வரும் லலித் பாபுவுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்