தமிழ் செய்திகள்  /  Sports  /  Furor Erupts Over Ronaldo Apparent Obscene Taunt In Saudi League Match

Cristiano Ronaldo: ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கை! சாதனை கோல் அடித்து சோதனையில் சிக்கிய ஸ்டார் வீரர் ரொனால்டோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 28, 2024 02:40 PM IST

சவுதி புரோ கால்பந்து லீக்கில் ரசிகர்களை நோக்கி கால்பந்து வீரர் ரெனால்டா வெளிப்படுத்திய செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவிதமாக அமைந்ததோடு, அவரது கால்பந்து கேரியரில் வெளிப்படுத்திய மோசமான நிகழ்வாக அமைந்தது.

சவுதி புரோ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
சவுதி புரோ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி புரோ கால்பந்து லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார் ரெனால்டோ. அல் நசர் - அல் ஷபாப் அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் மிக்க லீக் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

கட்டாய வெற்ற பெற்றாக வேண்டிய போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நசர் அணி வென்றது. இந்த போட்டியில் கோல் அடித்த ரொனால்டோ உள்ளூர் கால்பந்து லீக் போட்டிகளில் 750வது கோல் அடித்து புதிய மைல்கல் சாதனையை எட்டினார்.

இந்த போட்டியின்போது எதிரணியை சேர்ந்த ரசிகர்கள் மற்றொரு ஸ்டார் கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸியின் பெயரை "மெஸ்ஸி மெஸ்ஸி" என கூச்சலிட்டபோது களத்தில் இருந்த ரொனால்டோ கடுப்பாகியுள்ளார். அத்துடன் அந்த ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் ரெனால்டோவின் செயலை விமர்சித்துள்ளனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கையை சவுதி அரேபியா புரோ க்ளப் நிர்வாகம் மேற்கொள்ளுமா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஸ்டார் வீரராகவும், பலரது முன்மாதிரியாகவும் திகழ்ந்து வரும் ரெனால்டோ வெளிப்படுத்தியிருக்கும் இந்த ஒழுக்கமற்ற செயல் அவரது கால்பந்து கேரியரிலேயே கருப்பு புள்ளியாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்