HT Sports Special: செஸ் விளையாட்டில் இருந்து கிரிக்கெட்டில் சுழல் ஜாலம் செய்தவர் - எதிரணி வீரர்களின் தோழன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: செஸ் விளையாட்டில் இருந்து கிரிக்கெட்டில் சுழல் ஜாலம் செய்தவர் - எதிரணி வீரர்களின் தோழன்

HT Sports Special: செஸ் விளையாட்டில் இருந்து கிரிக்கெட்டில் சுழல் ஜாலம் செய்தவர் - எதிரணி வீரர்களின் தோழன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 23, 2023 06:15 AM IST

இந்தியாவுக்காக செஸ் மற்றும் கிரிக்கெட் என இரண்டு விளையாட்டுகளையும் விளையாடி வீரர் என்ற பெருமைக்குரியவர் யுஸ்வேந்திர சாஹல். டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்த பவுலராக இருந்து வருகிறார்.

இந்திய  ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சாஹல்
இந்திய ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சாஹல்

2009இல் இருந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் சஹாலுக்கு, 2011 ஐபிஎல் சீசனில் மும்பை அணியினராக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த சீசனில் ஒரேயொரு போட்டியில் மட்டும் பங்ககேற்றாலும், அதே ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் தொடரில் அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடினார்.

அந்த தொடரில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சாஹல் பவுலிங் அமைந்திருந்தது. இறுதிப்போட்டியில் வெறும் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2011 முதல் 2013 வரை மும்பை அணிக்காக விளையாடிய சாஹல், 2014 ஏலத்தில் ஆர்சிபி அணியினரால் அடிப்படை விலையான ரூ. 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அப்போது ஆர்சிபி அணியில் தொடங்கிய இவரது பயணம் 2021 வரை இருந்தது. இந்த காலகட்டத்தில் கோலியின் தலைமையில் விளையாடிய சாஹல், அவரது குட்புக் லிஸ்டில் இடம்பிடித்ததார். இதனால் இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு சஹாலுக்கு கிடைத்தது.

தனக்கு கிடைத்த அந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் சாஹல். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான சாஹல், அதே சுற்றுப்பயணத்தில் டி20 போட்டிகளிலும் விளையாடினார்.

2017இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல் டி20 போட்டிகளில் 5 விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனை புரிந்தார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட் வீழ்த்திய முதல் லெக் ஸ்பின்னர் என்ற பெருமையும் இவர் வசம் உள்ளது.

2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாஹல். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் அஜித் அகர்கருடன் இணைந்தார்.

தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வந்து சஹாலுக்கு 2019ஆம் ஆண்டு உலக கோப்பை ஒரு நாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2020இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜடேஜா வெளியேற கன்கஷன் வீரராக களமிறங்கிய சாஹல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் மாற்று வீரராக வந்த ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2021ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் சாஹல் சேர்க்கப்படாதது பலருக்கும் வியப்பு அளிக்கும் விதமாகவே இருந்தது. தற்போது ஒரு நாள், டி20 அணியின் ஸ்பின் பவுலராக இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சாஹல். களத்தில் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்து வரும் சாஹல், எதிரணி வீரர்களுடன் எளிதல் நட்பாகி கொள்ளும் வீரராக இருந்து வருகிறார். போட்டியின்போது எதிரணி வீரர்கள் பேட்டை எடுத்து ஸ்டைலாக பிடிப்பது, அவர்களிடம் ஏதேனும் குறும்புத்தனத்தை வெளிப்படுத்துவது என இருந்து வரும் இவர், ஒரு போட்டியின்போது பவுண்டரி அருகே ஹாயாக படுத்த ஸ்டில் ட்ரெண்டானது.

அதன் பின்னர் அது சஹாலின் சிக்னேச்சர் ஸ்டைலாகவே மாறியது. விக்கெட் வீழ்த்திய பிறகு ஓடி வந்து புல் தரையில் சறுக்கியவாறு ஸ்டைலாக படுப்பதை தனது செலிபிரேஷனாக வைத்துள்ளார் சாஹல்.

பிரபல யூடியூப்பர் தனாஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட சாஹல் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.