மனைவியை கொடுமைபடுத்திய ஆஸி. முன்னாள் வீரருக்கு ஜெயிலுக்கு பதில் கவுன்சிலிங்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  மனைவியை கொடுமைபடுத்திய ஆஸி. முன்னாள் வீரருக்கு ஜெயிலுக்கு பதில் கவுன்சிலிங்!

மனைவியை கொடுமைபடுத்திய ஆஸி. முன்னாள் வீரருக்கு ஜெயிலுக்கு பதில் கவுன்சிலிங்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 28, 2022 01:51 AM IST

முன்னாள் மனைவியை துன்புறுத்தியதாகவும், மிரட்டி வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஸ்லாட்டர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜெயில் தண்டனைக்கு பதிலாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.

<p>கோப்புபடம்: ஆஸ்திரேலியா வீரர்களுடன் மைக்கேல் ஸ்லாட்டர் (வலமிருந்து இரண்டாவது நபர்)</p>
<p>கோப்புபடம்: ஆஸ்திரேலியா வீரர்களுடன் மைக்கேல் ஸ்லாட்டர் (வலமிருந்து இரண்டாவது நபர்)</p>

இதைத்தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து முன்னாள் மனைவிக்கு ஏரளாமான மெசேஜ்களையும், கால்களை செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி தொல்லை தந்ததாக டிசம்பர் மாதத்தில் மீண்டும் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிப்ரவரி மாதம் முதல் தனது மனநல ஆரோக்கியத்தை சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தை வேவ்வெர்லி நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவித்தார். அத்துடன் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளுக்கு உறுதியான அர்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு பதிவு செய்துகொண்ட நீதிபதி ரோஸ் ஹட்சன், ஸ்லாட்டரை ஜெயிலுக்கு அனுப்பவுதற்கு பதிலாக மூன்று வாரங்கள் வரை மனநல காப்பகத்தில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் பிடிபட்ட அவர், போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டார். அதோடு இல்லாமல் 5 வெவ்வேறு உளவியல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுள்ள ஸ்லாட்டர், 100 நாள்களுக்கும் மேலாக சிகிச்சையும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்காக 74 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள ஸ்லாட்டர், அந்நாட்டில் புகழ் பெற்ற டிவியான செவன் நெட்வோர்கில் வர்ணனையாளராக இருந்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசனை பற்றி கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததாக ஸ்லாட்டர் அந்த டிவி சேனலில் இருந்து நீக்கப்பட்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.