Football World Cup Qualifier: ‘இன்னும் பல வெற்றிகளைப் பெறுவோம்’-இந்திய கால்பந்து அணி கோல்கீப்பர் பேட்டி
the-aiff.com உடனான ஒரு நேர்காணலில், குர்ப்ரீத், குவைத்துக்கு எதிராக முந்தைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் 25வது தடவையாக கோல் செல்லாமல் தடுத்து சேவ் செய்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கத்தாருக்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னதாக, இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, வரும் ஆண்டுகளில் தேசிய கால்பந்து அணியுடன் அதிக வெற்றிகளைப் பெறுவேன் என்று தெரிவித்தார்.
the-aiff.com உடனான ஒரு நேர்காணலில், குர்ப்ரீத், குவைத்துக்கு எதிராக முந்தைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் 25வது தடவையாக கோல் செல்லாமல் தடுத்து சேவ் செய்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
முந்தைய ஆட்டத்தில் 25வது முறையாக பந்து கோலாகாமல் தடுத்தேன். இதுபோன்று பல வெற்றிகளை நான் அணியுடன் இணைந்து பெறுவேன் என்று அவர் கூறினார்.
குர்பிரீத் சர்வதேச அரங்கில் இந்திய கோல் கீப்பரால் அதிக சேவ்களுக்கான புதிய தேசிய சாதனையை படைத்தார்.
இந்திய கோல்கீப்பர் 11 முக்கியமான சேவ்களை செய்த பிறகு லிஸ்டில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். குவைத்துக்கு எதிராக இந்தியா ஜெயிக்கவும் அவரது கோல் முறியடிப்பு உதவியது.
31 வயதான குர்ப்ரீத், சுனில் சேத்ரி இல்லாத அந்த போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டார்.
அந்தப் போட்டியைப் பற்றி குர்ப்ரீத் பேசும்போது, "எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் எதிராளியை திக்குமுக்காடச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் களத்தில் நின்று சவால் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அதிலிருந்து நாம் எதையாவது பெறலாம்" என்றார் அவர்.
பெங்களூரு எஃப்சி கோல்கீப்பர் 2011 இல் தேசிய அணிக்காக தனது முதல் போட்டியை விளையாடினார், அவரது அறிமுகத்தைத் தொடர்ந்து, அவர் இந்தியாவின் கோல் கீப்பராக இருந்து தனது அணிக்கு நிறைய சந்தர்ப்பங்களில் புள்ளிகளை வெல்ல உதவினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்