HBD Magnus Carlsen: ஆறு முறை உலக சாம்பியன்! செஸ் விளையாட்டின் ஹீரோ மேக்னஸ் கார்ல்சன் பிறந்தநாள் இன்று
செஸ் விளையாட்டின் ஹீரோ என்று வர்ணிக்கப்படும் செஸ் கிராண்ட் மாஸ்டரான மேக்னஸ் கார்ல்சன், மிக நீண்ட ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காதவர் என்ற பெருமையுடன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் செஸ் கிராண்ட்மாஸ்டராக இருந்து வருகிறார். செஸ் உலகின் ஹீரோ என்று அழைக்கப்படும் இவர் 5 முறை உலக செஸ் சாம்பியன் விருதை வென்றுள்ளார்.
செஸ் விளையாட்டு பல்வேறு பிரிவுகள் டாப் இடத்தை பிடித்திருக்கும் வீரராக இருந்து வரும் இவர், நான்கு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன், ஆறு முறை உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன் உள்பட பல்வேறு பட்டங்களை பலமுறை வென்றவராக உள்ளார். பிடே உலக செஸ் ரேங்கிங்கில் ஜூலை 2011 முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
இதற்கு முன்னர் முதல் இடத்தில் இருந்த ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர், கேரி காஸ்பரோவ் எடுத்திருக்கும் 2851 ரேட்டிங்கை வீழ்த்தி 2882 ரேட்டிங்கை பெற்ற வீரராக உள்ளார் கார்ல்சன்.
13 வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வரும் கார்ல்சன், அந்த வயதில்தான் தனது முதல் பட்டத்தை வென்றார். பின்னர் சில மாதங்களிலேயே கிராண்ட் மாஸ்டராக மாறிய அவர் 15 வயதில் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் உள்பட அடுத்தடுத்து முக்கிய பட்டங்களை வென்றார்.
கடந்த 2013இல், இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியனாந விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன். அந்த போட்டியில் இவர் 2870 ரேட்டிங்கை பெற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டிலும் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
உலக சாம்பியன், உலக ரேபிட் சாம்பியன்ஷிப், உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் ஆகிய டைட்டடில்கள் 2014இல் வென்று, ஒரே நேரத்தில் இந்த மூன்றையும் வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். 2009 முதல் 2013 வரை செஸ் ஆஸ்கர் விருதை வென்ற வீரராக கார்ல்சன் உள்ளார்.
செஸ் விளையாட்டு தவிர கால்பந்து, போக்கர் விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார் கார்ல்சன். இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஏராளமான புத்தகங்களும், திரைப்படங்களும் வந்துள்ளன.
உலக செஸ் விளையாட்டின் முடிசூட மன்னனாக இருந்து வரும் கார்ல்சன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்