தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kazakhstan Challenge: காலிறுதிக்கு தகுதி பெற்ற 5 இந்தியர்கள்! கலவை இரட்டையர் பிரவிலும் கலக்கல்

Kazakhstan Challenge: காலிறுதிக்கு தகுதி பெற்ற 5 இந்தியர்கள்! கலவை இரட்டையர் பிரவிலும் கலக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 05:21 PM IST

கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றும் வரும் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நான்கு பேர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கஜகஸ்தான் சேலஞ்ச்  பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப்
கஜகஸ்தான் சேலஞ்ச் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப்

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின், பேட்மிண்டன் ஆசியா சர்க்யூட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதில் இந்தியாவின் இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து நான்கு இந்தியர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இளம் வீராங்கனை அன்மோல் கர்ப், தேவிகா சிஹாக், முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாதயா, ஏழாம் நிலை வீராங்கனை தன்யா ஹேமந்த் மற்றும் இஷாராணி பருவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதியில் அன்மோல் கர்ப்

17 வயதாகும் இளம் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நுரானி ரது அஸ்ஸாஹ்ரா என்பவரை 21-11, 21-7 என்கிற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் வீழ்த்தினார்.

அன்மோல் கர்ப் தனது அடுத்த போட்டியில் சோரானோ யோசிக்காவா என்ற ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

இரண்டு முறை சர்வதேச பட்டங்களை வென்றிருக்கும் தேவிகா சிஹாக், அஜர்பைஜான் வீராங்கனையான கெய்ஷா பாத்திமா அஸ்ஸாஹ்ரா என்பவரை 21-12, 21-12 என்ற நேர் செட்களில் வென்றார்.

காலிறுதியில் இரண்டு இந்தியர்கள் மோதல்

செக் குடியரசு வீராங்கனை தெரேசா ஸ்வாபிகோவா என்பவை வீழ்த்தினார் அனுபமா உபாதாயா. இதைத்தொடர்ந்து தனது காலிறுதி போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான தேவிகா சிஹாக்கை எதிர்கொள்ள இருக்கிறார்.

ஏழாவது சீட் வீராங்கனையான தன்யா ஷா, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த க்சேனியா பாலிகார்போவாவை 21-11, 21-18 நேர் செட்களில் வீழ்த்தினார்.

நியூசிலாந்தின் டிஃப்பனி ஹோ என்பவரை இந்திய வீராங்கனை இஷ்ராணி 21-010, 20-14 என்ற செட் கணக்கில் வென்றார். இதையடுத்து இவரும் தன்யா ஷாவும் மற்றொரு காலிறுதி போட்டியில் மோத இருக்கிறார்கள்.

ஸ்வீடன் ஓபன், போர்ச்சுகல் சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்றவராக இளம் வீராங்கனை தேவிகா சிஹாக் உள்ளார்.

கலவை இரட்டையர் பிரிவிலும் வெற்றி

இந்தியா கலவை இரட்டையர் போட்டிகளில் ரோஹன் கபூர், ருத்விஜா ஷிவானி காடே, அப்யுதய் சௌத்ரி மற்றும் வைஷ்ணவி கட்கேகர், சஞ்சய் ஸ்ரீவத்சா தன்ராஜ்-மனீஷா கே, ஜாகுவோ சேயி மற்றும் அலிஷா கான் ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மகளிர் ஒற்றையர் பிரிவு, கலவை இரட்டையர் பிரிவு ஆகிய இரண்டிலும் இந்தியர்கள் கை ஓங்கியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்