Formula 4: ஃபார்முலா 4 கார்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் தமிழக பெண்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Formula 4: ஃபார்முலா 4 கார்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் தமிழக பெண்!

Formula 4: ஃபார்முலா 4 கார்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் தமிழக பெண்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 06, 2023 06:32 PM IST

புகழ் பெற்ற தேசிய ரேசிங் சாம்பியன் சரோஷ் ஹட்டாரியா என்பவர் தான் பிரியங்காவின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரியங்கா
பிரியங்கா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜயின் மகளான பிரியங்கா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆதித்யா மல்லையா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

கார் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்வத்தில், கோ கார்ட்டிங் கார் பந்தயங்களில் பயிற்சி பெற்றார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற நான்கு பயிற்சி பந்தயங்களில் மிகச் சிறப்பாக தனது திறமைகளை வெளிப்படுத்திய பிரியங்கா, ஆண்கள்-பெண்கள் பங்கேற்ற பிரிவில் 8வது இடத்தை பிடித்தார்.

மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தற்போது வரக்கூடிய கோவையை கறி மோட்டார் ஸ்பீட் வே போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக பெண் என்ற பெருமைக்குரிய மாணவி பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தில் அகுரா ரேசிங் அணி சார்ப்பில் பங்கேற்கிறார்.

புகழ் பெற்ற தேசிய ரேசிங் சாம்பியன் சரோஷ் ஹட்டாரியா என்பவர் தான் பிரியங்காவின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.