Formula 4 Street Circuit Race: முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா சர்க்யூட் இரவு நேர கார் ரேஸ்! எப்போது தெரியுமா?
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக F4 Indian Championship and Indian Racing League என்ற பெயரில் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ரேசிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL) இணைந்து ஃபார்முலா 4 வகை கார்பந்தயத்தை டிசம்பர் மாதம் நடத்த உள்ளது. இந்த போட்டிக்கான அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
சென்னையில் பார்முலா ரேசிங் சர்க்யூட் எப்4 கார்பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்றன மிகப்பெரிய மோட்டார் பந்தயம் இதுவாக உள்ளது.
எப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை தீவு திடல் மைதானத்தை சுற்றி 3.5 கிலோமீட்டர் சுற்றளவில் ஸ்டீரிட் சர்க்யூட் என்கிற இரவு போட்டியாக நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு மிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டியை மிகச்சிறப்பாக நடத்துவதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் நடத்தப்படும், பொது போக்குவரத்து சாலைகளில் பந்தயம் நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இந்த ஃபார்முலா 4 ஸ்டீரிட் சர்க்யூட் ரேஸ் பந்தயத்தை நடத்தவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்