FIFA World Cup 2026 Qualifiers: உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் அற்புத ஷாட் மூலம் இந்தியாவுக்கு கோல் பெற்று தந்தார் மன்வீர். இதன் பின்னர் வேறு கோல் அடிக்காத நிலையில் இந்தியா 1-0 கணக்கில் குவைத் அணியை வீழ்த்தியது
2026ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான இரண்டாம் சுற்று குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய அணிகளின் பிரிவில் இந்தியா - குவைத் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றன. இந்த போட்டியில் குவைத் வீரர் பைசல் அல்ஹர்பி இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்றார். இதனால் அவர் விளையாடும் வாய்ப்பு பறிபோன நிலையில் 10 வீரர்களுடன் குவைத் அணி விளையாடியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் 75வது நிமிடத்தின்போது இந்தியாவின் அட்டாக் வீரர் மன்வீர் இடது காலில் ஷாட் அடித்து இந்தியாவுக்கான முதல் கோல் பெற்று தந்தார். இதன் பின்னர் ஆட்டத்தின் முழு நேர முடிவு வரையிலும் இரு அணிகள் கோல் அடிக்கவில்லை.
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 21ஆம் தேதி புவனேஷ்வரில் வைத்து நடைபெருகிறது.
ஃபிபா உலகக் கோப்பை குவாலிபயர் சுற்று போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, குவைத், கத்தார், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி மூன்றாம் சுற்று குவாலிபயருக்கு தகுதி பெறும். அத்துடன் ஒவ்வொரு குரூப்பிலும் இருக்கும் டாப் இரண்டு அணிகள் 2027இல் நடைபெறும் ஏஎஃபசி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்