Fifa world cup 2022: இன்று முதல் நாக்அவுட்! நெதர்லாந்து - அமெரிக்கா மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் பிரிவு போட்டிகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இன்று முதல் ரவுண்ட் ஆஃப் 16 எனப்படும் நாக்அவுட் சுற்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
பிபா உலகக் கோப்பை குரூப் பிரிவு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. அதுமட்டுமில்லாமல் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டி ஒன்றும் இன்று நடைபெறுகிறது.
ொஇந்த சுற்றுக்கு ஒவ்வொரு பிரிவிலும் இருந்து டாப் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி, குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து, செனகல், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, போலந்து, குரூப் டி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, குரூப் இ பிரிவில் ஜப்பான், ஸ்பெயின், குரூப் எஃப் பிரிவில் மொராக்கோ , குரோஷியா, குரூப் ஜி பிரிவில் பிரேசில், ஸிவிட்சர்லாந்து, குரூப் எச் பிரிவில் போர்ச்சுக்கல், தென்கொரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதையடுத்து நாக்அவுட் போட்டியாக அமைந்திருக்கும் இந்த சுற்று போட்டிகளில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும் என்பதால் இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் மிகவும் பரபரப்பாகவே அமைந்திருக்கும்.
அத்துடன் இந்த போட்டிகளில் மொத்தமாக உள்ள 90 நிமிடங்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படும். அதிலும் முடிவு கிடைக்கவில்லை என்றால் பெனால்ட் சூட் அவுட் முறைய கடைப்பிடிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகளில் முதல் போட்டியில் நெதர்லாந்து - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதன்பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.
கடந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றோடு வெளியேறிய அர்ஜெண்டினா இந்த முறை மெஸ்ஸி தலைமையில் கோப்பையை கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குரூப் பிரிவில் செளதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த அர்ஜென்டினா அதன்பிறகு மீண்டு வந்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
டாபிக்ஸ்