Fifa world cup 2022: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மெஸ்ஸி…
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மெஸ்ஸி…

Fifa world cup 2022: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மெஸ்ஸி…

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 19, 2022 12:35 PM IST

இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து அர்ஜெண்டினாவுக்காக விளையாடுவேன் என நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த உலகக் கோப்பை விளையாடுவது சந்தேகம்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு ஓய்வு இல்லை என அறிவித்த மெஸ்ஸி
இப்போதைக்கு ஓய்வு இல்லை என அறிவித்த மெஸ்ஸி

முன்னதாக கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், "உலகக் கோப்பை பயணத்தை கடைசியாக இறுதிப்போட்டியுடன் முடிக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த உலகக் கோப்பை நடைபெற இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. நான் அப்போது விளையாடுவேன் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவே இவ்வாறு உலகக் கோப்பை பயணத்தை முடித்துக்கொள்வது சிறப்பானது என கருதுகிறேன்" என்றார்.

மெஸ்ஸியின் முடிவு குறித்து அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறியதாவது: " அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால் நாங்கள் அணி வைத்திருப்போம். ஆனால் அவரது எதிர்காலம், அர்ஜெண்டினா அணியில் விளையாட வேண்டுமா என்பது குறித்த முடிவை மெஸ்ஸிதான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் அணியின் மிக முக்கியமான வீரராக அவர் உள்ளார். அணிக்காக அவர் வெளிப்படுத்தும் பங்களிப்புகள் அனைத்தும் விஷயம் ஈடுஇணையற்றது" என்றார்.

35 வயதாகும் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி, 5 முறை உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடி அவர்,. அர்ஜெண்டினா அணிக்காகவும், பிபா உலகக் கோப்பையிலும் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை மொத்தம் 26 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

இவர் அணியில் இடம்பிடித்தபோது 2014ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணி ரன்னர் அப் கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இறுதிப்போட்டியில் நுழைந்து சாம்பியன் ஆகியுள்ளது.

இதையடுத்து உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் இன்னும் சில ஆண்டுகள் அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடலாம் என ரசிகர்கள் விருப்பமாக இருந்து வந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தொடர்ந்து விளையாட உள்ளேன் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார் மெஸ்ஸி.

கத்தாரில் நடைபெற்று முடிந்துள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணியை சிறப்பாக வழிநடத்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆக்கியுள்ளார் மெஸ்ஸி.

இது ஒரு புறம் இருக்க இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் கவனம் பெறும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருதையும் அவர் வென்றுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் கவனம் பெறும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருதையும் அவர் வென்றுள்ளார். இது அவர் பெறும் இரண்டாவது கோல்டன் பால் விருதாக அமைந்துள்ளது.

Whats_app_banner

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.