fifa world cup 2022: அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ்
கடந்த முறை சாம்பியன் படத்தை வென்ற பிரான்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் முதல் முறையாக தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி காலிறுதி போட்டி இங்கிலாந்து - பிரான்ஸ் இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பிரான்ஸ் அரையிறுதிக்கு நுழைந்து, இங்கிலாந்து அணியை வெளியேற்றியது.
குரூப் போட்டிகளிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரான்ஸ் அணி, இரண்டு தொடர் வெற்றிகளுடன் முதல் அணியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு நுழைந்தது.
அதன் பிறகு நாக்அவுட் போட்டியில் போலாந்து அணியை வீழ்த்திய பிரான்ஸ். தற்போது காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் வலிமையான அணியான இங்கிலாந்தை காட்டிலும் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடியது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சொளமெனி தனது அணிக்கான முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் இங்கிலாந்தின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் இங்கிலாந்து வீரர் ஹேரி கேன் ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த 1-1 என சமன் செய்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளும் ஒரு கோல் எப்படியாவது முன்னிலை பெற்றுவிட வேண்டும் என முயற்சித்து விறுவிறுப்பாக விளையாடினர். இதில் ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் உருவான வாய்ப்பை கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரெளடு. இதனால் 2-1 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தின் முயற்சிகளை பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக தடுத்த நிலையில், முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்று, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த அணியை போல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக குரோஷியா அணியும் அரையிறுதியில் விளையாடவுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
டாபிக்ஸ்