தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: கோல்டன் பால், பூட் க்ளோவ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்…

Fifa world cup 2022: கோல்டன் பால், பூட் க்ளோவ் விருதுகளை வென்றவர்கள் லிஸ்ட்…

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 19, 2022 11:29 AM IST

பிபா உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக அர்ஜெண்டினா அணி முத்தமிட்ட நிலையில், தொடர் நாயகன் விருதான கோல்டன் பால், அதிக கோல்களை அடித்த கோல்டன் பூட், சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை வென்றவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிபா உலகக் கோப்பை 2022 தொடர்களில் விருதுகள் வென்ற வீரர்கள்
பிபா உலகக் கோப்பை 2022 தொடர்களில் விருதுகள் வென்ற வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் பெணால்டி ஷூட் அவுட் வரை சென்று 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலக சாம்பியன் ஆகியுள்ளது.

இதையடுத்து நடந்து முடிந்துள்ள 2022 கால்பந்து உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதான கோல்டன் பால், அதிக கோல்களை அடித்த கோல்டன் பூட், சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் ஆகிய விருதுகளை வென்றவர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனித்தகுந்த வீரராக திகழ்ந்த அர்ஜெண்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி கோல்டன் பால் விருதை வென்றார். உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.

2022 உலகக் கோப்பையில் மொத்தம் 7 கோல்கள் அடித்த மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்தவர்கள் லிஸ்டில் 7 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவிலான முக்கிய தொடர்களில் இதுவரை மெஸ்ஸி 26 கோல்கள் அடித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக கோல்டன் பால் விருதை பெற்றுள்ளார்.

பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, சிறந்த ஸ்டிரைக் வீரராக 2022 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஜொலித்தார். 23 வயதாகும் இளம் வீரரான எம்பாப்பே இந்த உலகக் கோப்பை தொடரில் 8 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அத்துடன் இறுதிப்போட்டியில் 3 கோல்கள் அடித்து சாதனை புரிந்தார்.

கடந்த 1966இல் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட், இதேபோல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் எம்பாப்பே.

சிறந்த கோல் கீப்பர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் க்ளோவ் விருதை அர்ஜெண்டினா வீரர் எமிலியானோ மார்டினெஸ் வென்றார். அர்ஜெண்டினா அணி விளையாடிய 7 போட்டிகளில் களமிறங்கிய மார்டினெஸ், 3 கோல்களை தடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மூன்று முறை பெணால்டி ஷூட் அவுட் கோல்களையும் தடுத்துள்ளார். இதில் ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தடுக்கப்பட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்