Fifa world cup 2022: காலிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து, அர்ஜென்டினா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: காலிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து, அர்ஜென்டினா

Fifa world cup 2022: காலிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து, அர்ஜென்டினா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 05, 2022 10:12 AM IST

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணியும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாக்அவுட் போட்டியில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி (இடது), இங்கிலாந்து வீரர் ஜாக் கிரேலிஷ் (வலது)
நாக்அவுட் போட்டியில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி (இடது), இங்கிலாந்து வீரர் ஜாக் கிரேலிஷ் (வலது)

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் தனது அற்புத ஆட்டத்தால் அர்ஜென்டினா நட்சத்திர வீரரும், கேப்டனுமான மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

இதன்பின்னர் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரெஸ் அணிக்கு 2வது கோல் அடித்தார். இதனால் 2 கோல்களை பெற்றது அர்ஜென்டினா.

ஆஸ்திரேலியா அணியின் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் 77வது நிமிடத்தில் அந்த அணியின் என்சோ பெர்ணான்டஸ் மூலம் கோல் கிடைத்தது. இதன் பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா. ஆஸ்திரேலியா நாக்அவுட் சுற்றுடன் வெளியேறியது.

மற்றொரு போட்டியில் செனகல் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆட்டம் முடியும் வரை ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் ஹாி கேன் ஒரு கோலும் அடித்தனர். பின் 57வது நிமிடத்தில் புகாயோ சகா அணிக்கு மூன்றாவது கோல் அடித்தார்.

செனகல் அணி ஒரு கோல் கூட அடிக்க விடாமல் இங்கிலாந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.