FIFA Women's World Cup: பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது ஸ்பெயின்
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பைனலுக்கு முதல் முறையாக ஸ்பெயின் முன்னேறியது.
ஸ்பெயின் மகளிர் அணி, ஸ்வீடனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
காலிறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.
முன்னதாக, பந்து முழுவதும் ஸ்பெயினின் ஆதிக்கத்திலேயே இருந்தது. 13 ஷாட்களை ஸ்பெயினும், 6 ஷாட்களை ஸ்வீடனும் அடிக்க முயற்சி செய்தன.
டார்கெட்டை நோக்கி 2 ஷாட்களை ஸ்பெயினும், 3 ஷாட்களை ஸ்வீடனும் செய்தன.
ஃபவுல் என்பதை ஸ்பெயின் பக்கம் குறைவாக இருந்தது. 6 தவறுகளை மட்டுமே ஸ்பெயின் வீராங்கனைகள் நிகழ்த்தினர். ஆனால், ஸ்வீடன் 13 தவறுகளை நிகழ்த்தினர்.
ரெட் கார்டை பொருத்தவரை இந்த ஆட்டத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை.
பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடாமல் இருந்தது. இதனால், இரண்டாவது பாதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அந்த சமயத்தில் 81வது நிமிடத்தில் சல்மா ஒரு கோலை ஸ்பெயினுக்காக பதிவு செய்தார்.
பின்னர், எதிரணியின் ரெபெக்கா 88வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் சமநிலையை எட்டியது.
எனினும், அடுத்த நிமிடத்திலேயே துரிதமாக பந்தை கடத்திச் சென்ற ஸ்பெயின் வீராங்கனைகள் மற்றொரு கோலைப் பதிவு செய்து ஆர்ப்பரித்தனர்.
இவ்வாறாக ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 2 கோல்களை பதிவு செய்திருந்தது. ஸ்வீடன் 1 கோலுடன் சமாதானம் அடைய வேண்டியதாகிப் போனது. தோல்வி அடைந்ததை எதிர்பாராத ஸ்வீடன் வீராங்கனைகள் சோகத்துடன் காணப்பட்டனர்.
அதேநேரம், முதல்முறையாக உலகக் கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
அந்த அணியின் ரசிகர்களும் சந்தோஷமாக காணப்பட்டனர். இந்த ஆட்டம் நியூசிலாந்தின் எடன் பார்க் மைதானத்தில் நடந்தது.
நாளை பிற்பகல் 3.30 ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் மற்றொரு அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஜெயிக்கும் அணி, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை சந்திக்கும்.
தோற்கும் அணி, ஸ்வீடனுடன் மோதும். அந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி 3வது இடத்தை பிடிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்