FIDE Chess World Cup 2023: பிரக்ஞானந்தா மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா! டை பிரேக்கரின் இன்று தெரியும் முடிவு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fide Chess World Cup 2023: பிரக்ஞானந்தா மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா! டை பிரேக்கரின் இன்று தெரியும் முடிவு

FIDE Chess World Cup 2023: பிரக்ஞானந்தா மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா! டை பிரேக்கரின் இன்று தெரியும் முடிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2023 01:26 PM IST

உலகக் கோப்பை அரையிறுதியில் பிரக்ஞானந்தா - பேபியானோ கருணா மோதிய போட்டி டிராவில் முடிந்த நிலையில்,வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் டைபிரேக்கர் போட்டி இன்று நடைபெறுகிறது.

பரபரப்பாக நடைபெற்ற பிரக்ஞானந்தா - பேபியானோ கருணா இடையிலான அரையிறுதி போட்டி
பரபரப்பாக நடைபெற்ற பிரக்ஞானந்தா - பேபியானோ கருணா இடையிலான அரையிறுதி போட்டி

ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 206 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து அரையிறுதி சுற்றின் இராண்டாவது ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் டிரா ஆனது. இரு ஆட்டங்களும் டிரா ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. டைபிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபா சோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற இருக்கும் டை பிரேக்கரில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொள்வார் பிரக்ஞானந்தா.

இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தமிழக வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். பெரும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.